05th August 2022 06:13:24 Hours
கஜபா படையணியின் சேவை வனிதையர் பிரிவினரின் 14 வது பொதுக் கூட்டம் கஜபா படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே தலைமையில் திங்கட்கிழமை (1) கஜபா படையணி தலைமையகத்தில் இடம் பெற்றது.
சேவை வனிதையர் பிரிவினரின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், எதிர் வரும் ஆண்டுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். திருமதி ஜானகி லியனகே கடந்த ஒரு வருடத்தின் முன்னேற்றம் மற்றும் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களை சமர்பித்தார்.
பொதுக் கூட்டத்தின் போது பல நலத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. கூட்டத்தில் வரவேற்பு உரையும் நன்றியுரையும் இரண்டு சேவை வனிதையர் பிரிவினரின் சிரேஷ்ட உறுப்பினர்களால் வழங்கப்பட்டது.