29th December 2022 11:48:35 Hours
கஜபா படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே அண்மையில் அனுராதபுரத்தில் அமைந்துள்ள 'அபிமன்சல-1' நலன் விடுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டார்.
தனது விஜயத்தின் போது, திருமதி ஜானகி லியனகே அவர்கள் அங்கு வசிக்கும் போர் வீரர்களுடன் சுமுகமாக உரையாடியதுடன் அவர்களின் நலம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். இதன்போது உடன் வந்திருந்த சிரேஷ்ட உறுப்பினர்களும் தற்போது அங்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பெற்று வரும் 24 போர் வீரர்களின் கைவினைப் பொருட்களை பார்வையிட்டன.
பின்னர், போர் வீரர்களுக்கு அத்தியாவசிய சுகாதாரப் பொதிகளுடன் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளியான போர் வீரர்களின் பயன்பாட்டிற்காக சுமார் 150,000/- மதிப்புள்ள 10 நீர் குமிழிகள் அபிமன்சல -1 க்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. கஜபா படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் பெறப்பட்ட நிதியுதவியுடன் இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டன.
போர்வீரர்களுடன் அனைத்து பார்வையாளர்களும் 'அபிமன்சல -1' வளாகத்தில் தேநீர் அருந்தியதுடன், அபிமன்சல -1 இல் பார்வையாளர்கள் அதிதிகள் ஆவனத்தில் கையெழுத்திட்டு போர் வீரர்களிடம் விடைப்பெற்றனர். கஜபா படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே அவர்களுக்குப் பாராட்டுச் சின்னமாக நல விடுதித்தளபதி பிரிகேடியர் கபில சக்ரவர்த்தி விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.
கஜபா படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் விஸ்வஜித் வித்யானந்தாவும் இந் நிகழ்வில் கலந்துகொண்டார்.