19th March 2022 18:29:46 Hours
இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 15 மார்ச் 2022 அன்று அத்திடியவில் உள்ள ‘மிஹிந்து செத் மெதுர’விற்கு அதன் தலைவி திருமதி மிஹிரி ஹேரத்துடன் விஜயம் மேற்கொண்டனர்.
மிஹிந்துசெத் மெதுரவின் தளபதி கேணல் பிரியந்த லியனகே அவர்கள் வருகை தந்த தலைவியையும் அவரது உறுப்பினர்களையும் வரவேற்றார்.
சேவை வனிதையரினால்அங்கு வசிக்கும் மாற்றுத்திறனாளி போர் வீரர்களுக்கு, இலங்கை பொறியியல் படையணி கலிப்சோ குழுவினரின் இசைக்கு மத்தியில் மதிய உணவு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து திருமதி மிஹிரி ஹேரத் மிஹிந்துசெத் மெதுரவின் தளபதிக்கு அத்தியாவசியப் பொருட்களை பரிசாக வழங்கினார்.
இறுதியாக, மிஹிந்துசெத் மெதுரவின் தளபதி கேணல் பிரியந்த லியனகே மற்றும் பணிநிலை அதிகாரிகள் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.