08th July 2022 17:40:09 Hours
இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் 15 வது தலைவியாக திருமதி மல்லிகா விஜயசுந்தர அவர்கள் 2022 ஜூலை 02 இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தில் பதவியேற்றார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த அவரை சிரேஷ்ட சேவை வனிதையர் உறுப்பினர்கள் அன்புடன் வரவேற்றனர். சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் மகா சங்க உறுப்பினர்களின்‘செத்பிரித்’பராயணங்ளுக்கு மத்தியில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். பதவியேற்ற பிறகு, அனைத்து உறுப்பினர்களும் புதிய தலைவருக்கு தங்கள் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
புதிய தலைவி படையணியின் போர்வீரர்களின் நல்வாழ்வுக்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இந் நிகழ்வில் இலங்கை பொறியியல் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் மனோஜ் மதுரப்பெரும, பணிநிலை அதிகாரிகள் மற்றும் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.