15th September 2022 18:52:19 Hours
அனுசரனையாளரின் உதவியுடன் இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினால் 15 உலர் உணவுப் பொதிகளை மத்துகம மற்றும் வெலிபென்ன பிரதேசங்களில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு 2022 செப்டெம்பர் 05 'சாஷனரக்ஷக பல மண்டலய' பௌத்த பிக்குகளுடன் இணைந்து வழங்கப்பட்டது.
யாழ். பாதுகாப்புப் படை தலைமையக தளபதியும் இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதியுமானமேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் 14 வது படைப்பிரிவின் தளபதி ஆகிய இருவரும் இந்த திட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கினர்.12 வது களப் பொறியியல் படையணி படையினர் அந்த நிவாரணப் பொதிகளை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
அன்றைய தினம் பிட்டிகல பிரதேசத்தில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பம் ஒன்றின் மாற்றுத்திறனாளி பிள்ளைக்கான சக்கர நாற்காலியும் நன்கொடையாளர்கள் மற்றும் சேவை வனிதையரின் ஆதரவுடன் அன்பளிப்பு செய்யப்பட்டது.
அந்த நன்கொடை நிகழ்வுடன் இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மல்லிகா விஜயசுந்தரவும் இணைந்திருந்தார்.