16th October 2022 12:19:18 Hours
இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினால்அண்மையில் மத்தெகொடயில் உள்ள “மவ்பியசெவன” சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள அனாதை பிள்ளைகளுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் எழுதுபொருட்கள் உட்பட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. அந்தக் பிள்ளைகளுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டதுடன், இலங்கை பொறியியல் படையணி கலிப்சோ இசைக்குழுவினர் தமது பொழுதுபோக்கு இசையினால் நிகழ்வை மேலும் வண்ணமயப்படுத்தினர்.
இந்நிகழ்வில் இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. மல்லிகா விஜயசுந்தர மற்றும் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மதிய உணவு மற்றும் பரிசு பொருட்களை வழங்கினர்.இந்த நன்கொடைகளுக்கு திரு.நுவன்சஞ்சீவ, திரு.தனுகவிஜேசேகர மற்றும் கெப்டன் லஹிரு ரத்நாயக்க ஆகியோர் அனுசரணை வழங்கினர்.1 வது களப் பொறியியல் படையணி கட்டளை அதிகாரி மற்றும்வீரர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.