16th October 2022 12:27:02 Hours
இராணுவ பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினரின் விசேட நிகழ்வில் மத்துகமவிலுள்ள உரகொட ஆரம்ப பாடசாலையின் 60 மாணவர்களுக்கு விசேட பரிசாக பாடசாலை உபகரணங்களும் மதிய உணவும் 2022 ஓக்டோபர் 7 வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மல்லிகா விஜேசுந்தர கலந்து கொண்டார்.
நிகழ்ச்சித் திட்டத்திற்கான நிதியுதவியினை திரு விபுல், திரு மனோஜ் குமார் மற்றும் திரு கசுன் ரூபசிங்க ஆகியோர் வழங்கியதுடன், இத்திட்டத்தினை 12 வது இலங்கை பொறியியல் படையினர் ஒருங்கிணைத்தனர்.