Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

19th December 2022 10:36:54 Hours

இலங்கை பொறியியல் படையணி மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையரால் புத்தக நன்கொடை

இலங்கை பொறியியல் படையணி மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதை பிரிவினர் இணைந்து 7 வது முறையாக நடாத்தும் ‘‘அத ஹித 2022’’ புத்தக நன்கொடை நிகழ்வினை இலங்கை பொறியியல் படையணி மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணியில் சேவையாற்றும் சிவில் ஊழியர்களின் குடும்பங்களின் 230 பிள்ளைகளுக்காக வழங்கும் நிகழ்வினை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 13) மத்தெகொட இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘‘அத ஹித 2022’’ திட்டத்தின் பிரதான தலைவரான திரு. பிரசாத் லொகுபாலசூரிய வழங்கிய அனுசரணையுடன் திட்டத்தின் உறுப்பினர்களான திரு. சிந்தக அபேசேகர, திரு. டானி பெரேரா, திருமதி. சுபோதா செத் ஹேவகே, திரு. உஷான் முதித குணவிக்ரம, திருமதி. சாரினி நாணயக்கார மற்றும் திரு. மலிகா ரொட்ரிகோ ஆகியோருடன் இணைந்து நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக இலங்கை பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. ஷம்மி ஜயவர்தன மற்றும் இலங்கை பொறியியல் படையணிபடைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர். திரு. பிரசாத் லொகுபாலசூரிய மற்றும் அவரது குழுவினர், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.