17th January 2023 21:47:38 Hours
இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தில் வியாழன் (12) இலங்கை பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி ஷம்மி ஜயவர்தன அவர்கள் மகா சங்க உறுப்பினர்களின் ‘செத்பிரித்’ பராயணங்ளுக்கு மத்தியில் பதவியேற்றார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த அவரை சிரேஷ்ட சேவை வனிதை உறுப்பினர்கள் அன்புடன் வரவேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் உறுப்பினர்களுடன் அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன் வாழ்த்துக்களுக்கு மத்தியில் தனது எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டார்.