07th April 2023 14:43:46 Hours
அனுராதபுரத்தில் உள்ள 'அபிமன்சல -1' நலன் விடுதியில் வசிக்கும் போர் வீரர்களின் நலம் விசாரிக்கும் நோக்கத்துடன் இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் 2023 மார்ச் 27அன்று விஜயம் செய்தது.
இந்த விஜயத்தை 8 வது களப் இலங்கை பொறியியல் படையணி ஒருங்கிணைத்தது. இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. ஷம்மி ஜயவர்தன மற்றும் பங்குபற்றிய சேவை வனிதையர் அங்கு வசிக்கும் போர்வீரர்களுடன் சுமுகமாக உரையாடி, அவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு அவர்களின் நலம் மற்றும் சிகிச்சைமுறையின் முன்னேற்றம் குறித்து விசாரித்தனர்.
அதன்பின் 'அபிமன்சல -1'போர்வீரர்களுடன் அனைத்து உறுப்பினர்களும் மெல்லிசையுடன் தேநீர் விருந்துபசாரத்தில் இணைந்துகொண்டனர்.வரவிருக்கும் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையரால் பரிசுபொருட்கள் போர்வீர்களுக்கு வழங்கப்பட்டன.
இலங்கை பொறியியல் படையணி தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன , 8 வது இலங்கை பொறியியல் படையணி கட்டளை அதிகாரி மேஜர் என் எல் சி சந்திரஜித் மற்றும் திருமதி. சஞ்சீவனி சந்திரஜித் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களுக்காக அனுராதபுரத்தில் உள்ள ‘அபிமன்சல -1’ வாழ்நாள் முழுவதும் பராமரிப்பு, புனர்வாழ்வு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை வழங்குவதற்கான வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.