24th April 2023 09:06:52 Hours
இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினால்புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக, ஏப்ரல் 13 சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எம்பிலிப்பிட்டிய முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு உதவிகள் வழங்கப்பட்டன. இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி ஷம்மி ஜயவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் குசுமா முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு உலர் உணவுகள் மற்றும் இரவு விருந்துபசாரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில்இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் எம் கே ஜயவர்தன ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு, இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள்,பொது பொறியியல் பிரிகேட் மற்றும் 15 வது (தொ) இலங்கை பொறியியல் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.