22nd November 2022 11:51:26 Hours
இராணுவ பீரங்கி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாமா வனசிங்க உட்பட இராணுவ பீரங்கி படையணியின் சேவை வனிதையர் கிளை உறுப்பினர்கள் ஒக்டோபர் 28 ஆம் திகதி முல்லேரியா தேசிய வைத்தியசாலையின் விடுதி 5க்கு விஜயம் செய்து அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு சேவை வனிதையர் பிரிவின் செலவில் மதிய உணவை வழங்கினர்.
விடுதியில் சிகிச்சை பெறுபவர்கள் இராணுவ கெலிப்சோ இசைக்குழுவினர் வழங்கிய இசை நிகழ்சியில் மகிழ்ந்தனர்.
இராணுவ பீரங்கி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் வைத்திய சாலையின் கோரிக்கைக்கு இணங்க ஒரு உலோக அலமாரியை அன்பளிப்பாக வழங்கினர்.