Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

06th January 2023 13:25:03 Hours

இராணுவ பீரங்கி படையணிப் பெண்களால் சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள்

இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவினால் இராணுவ பீரங்கி படையணியின் கீழ் பணியாற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் ஊழியர்களுக்கு தலா 3000 ரூபாய் மதிப்புள்ள 102 உலர் உணவுப் பொதிகளை விநியோகிக்கும் திட்டத்தை வியாழக்கிழமை (டிசம்பர் 22) பனாகொட இலங்கை பீரங்கி படையணி தலைமையகத்தில் ஏற்பாடு செய்தனர்.

இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாமா வனசிங்க மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான கேணல் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன், மொத்தம் 102 பயனாளிகளில் 30 பயனாளிகள் இலங்கை பீரங்கி படையணி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் அடையாளமாக தங்கள் பொதிகளை பெற்றுக்கொண்டனர்.

இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் ஒருங்கிணைப்பு மற்றும் முன்முயற்சியின் மூலம் அனுசரனையாளரிடம் இருந்து ரூ. 306,000.00ம் மதிப்புள்ள அனுசரணையினால் இந் நிகழ்ச்சி சாத்தியமானது. இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பல இலங்கை பீரங்கி படையணியின் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.