31st March 2023 11:36:27 Hours
இராணுவ பீரங்கி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷாமினி கொட்டுவேகொட, சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் இணைந்து வியாழக்கிழமை (23) ராகம ‘ரணவிரு செவன’ நலவிடுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன் போது 'ரணவிரு செவன'வில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த போர்வீரர் தாம்புலம் வழங்கி, சேவை வனிதையர் பிரிவின் தலைவியை வரவேற்றார்.
அனைத்து பார்வையாளர்களும் போர்வீரர்களுடனான அவர்களின் நெருங்கிய தொடர்புகளின் போது அவர்களின் நலம் விசாரித்து, அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தியதுடன், அவர்களிடையே பரிசுப் பொருட்களை பகிர்ந்து கொள்ளப்படுவதற்கு முன்பு அவர்களுடன் நட்புரீதியில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
ராகம ரணவிரு செவன நல விடுதி கட்டளை அதிகாரி, மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.