24th April 2023 16:06:00 Hours
இராணுவ பீரங்கி படையணியின் சேவை வனிதையர் பிரிவினால் வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு இணையாக இராணுவ பீரங்கி படையணி தலைமையகத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 6) அனைத்து இராணுவ பீரங்கி படையணி அமைப்புகளிலும் பணியாற்றும் சிவில் 45 சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இராணுவ பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாமா வனசிங்க, படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ ஆகியோர் நிவாரணப் பொதிகளை விநியோகிக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.