16th October 2022 12:01:02 Hours
தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு இலங்கை கவச வாகனப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் (திருமதி) ஹர்ஷனி போதொட்ட, அதன் உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கை கவச வாகனப் படையணியின் படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் 100 கர்ப்பிணி துனைவியர்களுக்கு 5,000/= ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொதிகளை வழங்கினர்.
சேவை வனிதையர் பிரிவின் நிதியைப் பயன்படுத்தி, அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகள், அவர்களது வீட்டுக்கும் அவர்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட அந்தந்த மருத்துவமனைகளுக்கும் அனுப்பபட்டதுடன், பயனாளிகளின் தேவைக்கேற்ப அந்தந்த படையலகுகளில் விநியோகிக்கப்பட்டன.