14th November 2022 21:13:46 Hours
இலங்கை கவசப் வாகன படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் (திருமதி) ஹர்ஷனி போதொட்ட அவர்கள் பாங்கொல்லை ‘அபிமன்சல - 3’, நலன் விடுதிக்கு 2022 ஒக்டோபர் 22 விஜயம் மேற்கொண்டனர்.
‘அபிமன்சல - 3’, தளபதியால் வரவேற்கப்பட்டதுடன், சிகிச்சை பெறும் 35 போர்வீரர்கள் இருக்கும் விடுதிக்கு விஜயத்தை மேற்கொண்டதுடன், அவர்களுக்கு சுவையான சிற்றுண்டி, பரிசுப் பொதிகளையும் வழங்கினர்.
நிகழ்வின் முடிவில், அனைத்து போர்வீரர்களை மகிழ்விக்கும் நிமித்தம் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்திட்டம் 5வது இலங்கை கவச வாகனப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூஏடபிள்யூடி சுஜித் அவர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.
திருமதி இந்திகா பம்பரதெனிய மற்றும் மாவட்டம் 306 சி - 2 லயன்ஸ் கழகம் பரிசுப் பொதிகளை வழங்குவதற்கு அனுசரணை வழங்கியது.