11th January 2022 19:19:22 Hours
இலங்கை இராணுவ கவசப் படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் 2022 ஜனவரி 04 ஆம் திகதி முகத்துவாரத்தில் அமைந்துள்ள ரொக் ஹவுஸ் இராணுவ முகாமிலுள்ள படையினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் வைத்திய உபகரணங்கள் உட்பட டெப் கணினிகள் மற்றும் புத்தகங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை இராணுவ கவசப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் திருமதி ஹர்ஷினி போதோட்ட அவர்களின் அழைப்பின் பேரில், இலங்கை இராணுவ கவசப் படையணித் தளபதி மேஜர் ஜெனரல் ஸ்வர்ண போதோட்ட இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அதே நேரம், இலங்கை இராணுவ கவசப் படையணியின் நிலையத் தளபதி ,1 வது இலங்கை இராணுவ கவசப் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இராணுவத் தலைமையகத்தில் உள்ள இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் இரண்டு புலமைப்பரிசில்கள், க.பொ.த சாதாரண தரம் (2019) மற்றும் க.பொ.த உயர் தரம் (2019) பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற இருவருக்கு அவர்களின் உயர் கல்வியைத் தொடர்வதற்கான ஊக்குவிப்பு தொகையும் வழங்கி வைக்கப்பட்டன.
அதே சந்தர்ப்பத்தில், இலங்கை இராணுவ கவசப் பிரிகேடின் தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சம்பத் வங்கியின் பிரதம நிதி அதிகாரி திரு அஜந்த டி வாஸ் குணசேகர அவர்கள் இலங்கை இராணுவ கவசப் படையணியின் மறைந்த கோப்ரல் ஒருவரின் மகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கு முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.