30th March 2022 08:56:23 Hours
கவச வாகன படையணியின் சேவை வனிதையர் பிரிவின் 23வது வருடாந்த பொதுக் கூட்டம் மார்ச் 20 ம் திகதி 70 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம் பெற்றது.
கவச வாகன படையணியில் உயிரிழந்த போர் வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சேவை வனிதையர் பிரிவின் கீதம் இசைக்கப்பட்டது. பின்னர், 2022 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்பின், மருத்துவ மனநல மருத்துவர் வைத்தியர் என் குமாரநாயக்க வீட்டு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக விரிவுரையை நிகழ்த்தினார், மேஜர் டிலான் தர்மரத்ன ஆசாரம் பற்றிய உரையை நிகழ்தினார். இதே சந்தர்ப்பத்தில், இராணுவ வீரர்களின் துணைவியர்களுக்கு மூன்று அதிவேக ஓவர்லாக் தையல் இயந்திரங்களும் பரிசாக வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் கவச வாகன படையணியின் சேவை வனிதையர் பிரிவில் புதிதாக நிறுவப்பட்ட அலுவலகம் வைத்தியர் திருமதி ஹர்ஷினி போதொட்ட அவர்களால் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் திறந்து வைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற/சேவையில் உள்ள வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான நலனை விரிவுபடுத்தும் வகையில் இத் திட்டம் தொடங்கப்பட்டது.
கவச வாகன படை அதிகாரிகளின் உணவகத்தில் இடம் பெற்ற மதிய உணவு விருந்துடன் அன்றைய நிகழ்வு நிறைவடைந்தது.