13th September 2022 17:30:27 Hours
6 வது இலங்கை கவசப் வாகன படையணியின் 15வது ஆண்டு நிறைவை ஒட்டி, இலங்கை கவசப் வாகன படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் கிடைக்கப்பெற்ற வளங்களுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தையல் நிலையம் செப்டம்பர் 02 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை கவசப் வாகன படையணியின் சேவை வனிதையர் பிரிவானது, அனைத்து நிலையினரதும் நலன்புரித் தேவைக்கு ஆதரவளிக்கும் வகையில், படையலகுக்கு இரண்டு தையல் இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கியது. புதிய தையல் நிலையத்தின் மூலம் சேகரிக்கப்படும் நிதி இலங்கை கவசப் வாகன படையணியின் சேவை வனிதையர் பிரிவினருக்கு வழங்கப்படும். 6 வது இலங்கை கவசப் வாகன படையணியின் கட்டளை அதிகாரி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மொரவெவ முகாமில் புதிய தையல் நிலையத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.
6 வது இலங்கை கவசப் வாகன படையணியின் படையினர், சேவை வனிதையர் குழு உறுப்பினர்கள் மற்றும் அழைப்பாளர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
6 வது இலங்கை கவசப் வாகன படையணியின் சேவை வனிதையர் உறுப்பினர்கள், படையினரின் கர்ப்பிணி மனைவிமாருக்கு குழந்தை பராமரிப்புப் பொருட்களையும் அதே நாளில் நன்கொடையாக வழங்கினர்.