16th October 2022 12:01:02 Hours
இலங்கை கவசப் வாகன படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால், தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் தேவைகளுக்கான உதவி தொகை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இலங்கை கவசப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி டாக்டர் (திருமதி) ஹர்ஷினி போதொட்ட தலைமையில், உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 2022 ஒக்டோபர் முதலாம் திகதி படையணி தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை கவசப் படையணியின் பெண்கள் கழகத்தின் ஏழு உறுப்பினர் புலமைப்பரிசில்களுக்கு நிதியுதவி அளித்தனர். பயனாளிக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் கல்விக்காக ரூ.36,000/= மற்றும் ரூ.60,000/= ம் பெருமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.
இரு புலமைப்பரிசில்கள் இலங்கை கவசப் வாகன படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவியினால் ஒருங்கிணைக்கப்பட்டதுடன் மற்றும் ஏனைய புலமைப்பரிசில்கள் இலங்கை கவசப் வாகன படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உபதலைவி திருமதி சமங்கா பெர்னாண்டோ, கலாநிதி ஹிமாலி நியங்கொட, திருமதி சஞ்சீவனி பீரிஸ், திருமதி மோனிகா அமுனுகம மற்றும் திருமதி விமாலி ஆகியோரால் வழங்கப்பட்டது.