06th February 2023 09:38:12 Hours
மாற்றுத்திறனாளி போர்வீரர்களின் திறனை உயர்த்துவதற்கும் அவர்களின் நலம் விசாரிக்கும் நோக்கத்துடன், இலங்கை கவசப் வாகன படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் (திருமதி) ஹர்ஷினி போதொட்ட அவர்களுடன் இலங்கை கவசப் வாகன படையணியின் படைத் தளபதி மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் இலங்கை கவசப் வாகன படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் சனிக்கிழமை (28) அத்திடியவில் உள்ள 'மிஹிந்து செத் மெதுர' நல விடுதிக்கு விஜயம் செய்தனர்.
அவர்கள் விடுதிகளுக்குச் சென்று போர்வீரர்களுடன் உரையாடியதுடன் பரிசுப் பொதிகளையும் வழங்கினர். அத்துடன், அவர்கள் போர் வீரர்களின் பயன்பாட்டிற்காக 32" அங்குழ எல்இடி தொலைகாட்சி ஒன்றையும் பரிசாக வழங்கினர். விஜயத்தின் முடிவில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்வானது போர்வீரர்களை மகிழ்வித்தது.