03rd June 2023 13:02:06 Hours
இலங்கை கவச வாகன படையணியின் சேவை வனிதையர் பிரிவு, இலங்கை கவச வாகன படையணியில் சேவையாற்றும் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் விழாவை வியாழக்கிழமை (மே 25) ரொக் ஹவுஸ் இராணுவ முகாமில் வழங்கியதுடன், ஒரு சிப்பாயின் தகுதியான தாய்க்கு சக்கர நாற்காலியும் வழங்கிவைக்கப்பட்டது.
இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவியின் அழைப்பின் பேரில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி (வைத்தியர்) ஹர்ஷினி போத்தொட்ட அவர்களின் அழைப்பின் பேரில், சேவை வனிதையர் பிரிவின் பெண்களுடன் இணைந்து மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்தவும், இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களின் நலன்புரி பங்கை மேம்படுத்தவும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், இலங்கை கவச வாகன படையணியின் படையினர்களின் பிள்ளைகளுக்கு தலா 36,000/= ரூபா பெறுமதியான 20 புலமைப்பரிசில்களும், சுயதொழில் வாய்ப்பை மேம்படுத்துவதற்காக தலா 60,000/= ரூபா பெறுமதியான நான்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது படையினரின் வாழ்க்கைத் துணைவர்களின், ஒரு சிப்பாயின் வாசஸ்தலத்தின் பாதுகாப்பிற்காக கொங்கிறீட் சுவர் அமைப்பதற்கு 200,000/= ரூபா மற்றும் சிவில் ஊழியர்களின் தங்குமிடத்தின் கூரையை சீர்செய்வதற்காக 75,000/= ரூபாவும் வழங்கப்பட்டது.
இந்த ஏற்பாட்டின் போது ஒரு இராணுவ வீரரின் நோய்வாய்ப்பட்ட தாய்க்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டதுடன், விருது வழங்கும் விழாவின் போது இராணுவ நடனக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் மெருகூட்டின.
இலங்கை கவச வாகன படையணியின் அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.