03rd June 2023 13:14:49 Hours
இலங்கை கவசப் வாகன படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி (வைத்தியர்) ஹர்ஷினி போதொட்ட அவர்கள் மறைந்த இலங்கை கவசப் வாகன படையணியின் சிப்பாய் ஆர்ஏ இந்திரகுமார அவர்களின் துணைவிக்கு தையல் இயந்திரம் ஒன்றை திங்கட்கிழமை (மே 22) பண்டாரவளையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று அன்பளிப்பு செய்தார்.
இலங்கை கவசப் வாகன படையணியின் சேவை வனிதையர் பிரிவின் நிதியுதவியுடன் குறிப்பிட்ட சிப்பாயின் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை கவசப் வாகன படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டிபிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, இலங்கை கவசப் வாகன படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி (வைத்தியர்) ஹர்ஷினி போதொட்ட நிலைய தளபதி பிரிகேடியர் பீஎன் விஜேசிறிவர்தன, இலங்கை கவசப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் பணி நிலை அதிகாரி I (வழங்கல்) லெப்டினன்ட் கேணல் எஎம்எஜிபி ஒபேசேகர மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி கெப்டன் பீஎஸ்எச் முத்துக்குமரன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.