23rd February 2023 07:47:04 Hours
சாலியபுர கஜபா படையணி தலைமையகமும் கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவு இணைந்து கஜபா படையணி தலைமையகத்தில் சனிக்கிழமை (ஜனவரி. 21) கஜபா படையணியின் சேவையாற்றும், ஒய்வுபெற்ற மற்றும் உயிர் நீத்த கஜபா படையணி படையினரின் 100 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்கினர்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே அவர்களின் கருத்தியலில் அடிப்படையில் கஜபா படையணியின் படைத்தளபதியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இராணுவ தளபதி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பாரம்பரிய மங்கள விளக்கேற்றல், சமய அனுஷ்டங்கள், உயிரிழந்த வீரர்களை நினைவுகூர்ந்து தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றதை தொடர்ந்து இராணுவ தளபதி உரையாற்றினர். அதன் பின் இராணுவ கலாசார குழுவினரின் நடன நிகழ்வும் இடம்பெற்றது.
இவ்விழாவில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 56 மாணவர்களுக்கும் 6-12 தரங்களில் கல்வி கற்கும் 28 மாணவர்களுக்கும் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்ற 9 மாணவர்களுக்கும் விசேட தேவையுடைய மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு எழுதுபொருட்கள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் பண உதவிகள் வழங்கப்பட்டதன.
இவ் விழாவின் நிறைவாக மாணவர் ஒருவர் இந் நிகழ்விற்கு நன்றி கூறி நன்றியுரை ஆற்றினார்.
இந் நிகழ்வில் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சி டி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ , மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ ஆர் எம் எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு, 52 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கே பீ எஸ் எ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம் ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம் சி பி விக்கிரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி, 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் பீ அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.