21st June 2023 19:12:10 Hours
இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் இராணுவத் தலைமையகத்தில் சேவையாற்றும் சிவில் ஊழியர்களின் பொருளாதாரச் சிரமங்களைக் குறைப்பதற்கும், பௌத்த போதனைகளில் 'தானம்' (நன்கொடை) என்ற கட்டளையைப் பின்பற்றுவதற்கும் மீண்டும் தனது உதவிக்கரம் நீட்டும் முகமாக 483 உலர் உணவு பொதிகளும் பச்சை உணவு பொதிகளும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துக் கணெ்டு வழங்கினர்.
விநியோக நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வில் இராணுவத் தளபதி பிரதம அதிதியாக கலந்துகொண்டு 49 சிவில் ஊழியர்களுக்கு அந்த நிவாரணப் பொதிகளை வழங்கினார்.இவ் ஒவ்வொரு உணவு பொதியிலும் சுமார் ரூபா 2500.00 பெறுமதியான அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம், தேங்காய்பால் பக்கற், போன்றன உள்ளடங்கியிருந்ததுடன், இப் பொதிகளின் மொத்த பெறுமதி 1.2 மில்லியன் ரூபா ஆகும். சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தொடர்ந்தும் ஏனைய நிவாரணப் பொதிகளை விநியோகித்தனர்.
இதற்கிடையில், நெஸ்லே லங்கா பீஎல்சி சேவை வனிதையர் பிரிவின் ஒருங்கிணைப்பு மூலம் 3.7 மில்லியன் பெறுமதியான தேங்காய் பால் பொதிகளை இராணுவ தலைமையக வளாகத்தில் பணிபுரியும் அனைத்து இராணுவத்தினர்களுக்கும் மற்றும் சிவில் ஊழியர்களுக்கும் வழங்கியதுடன்,அதே நேரத்தில், திட்டத்தின் விரிவாக்கமாக அந்த நிவாரண தேங்காய் பாலில் ஒரு பங்கை இராணுவத் தலைமையகத்திற்குள் பணியாற்றும் இராணுவப் பணியாளர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூபிஎஸ்எம் அபேசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, வழங்கல் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, யுத்த உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்ஆர்டபிள்யூ டபிள்யூடபிள்யூடபிள்யூஎச்ஜேபி வணிகசேகர யூஎஸ்பீ, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.