24th February 2023 12:35:24 Hours
இராணுவத் தலைமையகத்தில் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட 'விரு சிசு பிரதீபா' புலமைப்பரிசில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக இராணுவக் குடும்பங்கள், மறைந்த போர்வீரர்கள் மற்றும் காயமடைந்த போர்வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக இராணுவத் தலைமையகத்தில் வியாழன் (23 பெப்ரவரி) அன்று நடைபெற்ற நிகழ்வின் போது 25,000 ம் ரூபா பெறுமதியான 100 புலமைப்பரிசில்களை மாணவர்களுக்கு வழங்கினர்.
இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந் நிகழ்வில் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக போராடிய, சேவை செய்பவர்களின் பிள்ளைகள் பயனாளிகளாக கலந்து கொண்டதுடன், தேசிய பாதுகாப்பு நிதியம் மற்றும் இலங்கை வங்கி இணைந்து திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான அனுசரணையை வழங்கியது.
பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோருக்கு புலமைப்பரிசில் பெற்ற இரு பிள்ளைகள் வெற்றிலை வழங்கி வரவேற்றனர். இத்திட்டத்தின் கீழ் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒவ்வொரு மாணவருக்கு தங்களது கல்வி தேவைகளுக்காக தமது சேமிப்புக் கணக்கில் ரூபா 25,000 வைப்பில் இடப்பட்டது.
இந் நிகழ்வில் 30 பயனாளிகள் கலந்து கொண்டதுடன் மங்கள விளக்கேற்றி இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கீதம் இசைத்ததுடன், இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அந்த ஊக்கத்தொகையின் ஒரு பகுதியை வழங்கியதன் பின்னர் உரையாற்றியதில் இளைஞர்கள் நன்றாகப் படித்து இந்த நாட்டின் தேசபக்தியுள்ள குடிமக்களாக இருக்க வேண்டும், ஏனெனில் இது அவர்களின் இறந்த தந்தைகள் அல்லது காயமடைந்தவர்களுக்குச் செய்யும் மரியாதை எனவும் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு பாடசாலைப் பொருட்கள், ஆங்கில-சிங்கள அகராதி மற்றும் சிறுவர் சேமிப்பு கியூப் உட்பட சுமார் 7000ம் ரூபாய் பெறுமதியான பொருட்களை இராணுவத் தளபதி, இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ ஆகியோரினால் வழங்கப்பட்டது.
இங்கிலாந்து சசெக்ஸ், லயன்ஸ் கிளப் ஒப் ஹார்ஷம் ஆதரவுடன் அனுசரணை வழங்கிய திரு டான் அந்தோணி மற்றும் திருமதி சாமினி ஆண்டனி ஆகியோர் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களால் சுமார் ரூ. 2.7 மில்லியன் பெறுமதியான மூக்குகண்ணாடிகள் மற்றும் செவிப்புலன் கருவிகள், மாத்தளை, கைகாவல, கொஸ்வானை விஷேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் தேவையுடைய இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவியாக வழங்கப்பட்டன.
அவர்களின் தாராள மனப்பான்மையை அங்கீகரிக்கும் வகையில், இராணுவத் தளபதி திரு திருமதி அந்தோணி தம்பதியினருக்கு நினைவுச் சின்னம் வழங்கினார்.
ஒரு பயனாளி நன்றியுரையை வழங்கியதுடன், தனது உரையில் இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் வழங்கப்பட்ட ஊக்கத்தொகைக்கு நன்றி தெரிவித்தார். தேநீர் விருந்துபசாரத்தின் போது அன்றைய பிரதம விருந்தினர் பயனாளிகள் மற்றும் அழைக்கப்பட்டவர்களுடன் உரையாடியதுடன் ஓரிரு எண்ணங்களையும் இன்பங்களையும் பகிர்ந்து கொண்டார்.
உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜெயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பல சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் சிப்பாய்கள் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.