03rd July 2023 22:04:15 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே இராணுவப் படையினருக்கான யோகர்ட் உற்பத்தியை விரிவுபடுத்தும் வகையில் தியத்தலாவ 8 வது இலங்கை சேவைப் படையணி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) இராணுவ சேவை வனிதையர் பிரிவின் அழைப்பின் பேரில் யோகர்ட் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார்.
இலங்கை சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வாசனா வணிகசேகர அவர்கள் அன்றைய பிரதம அதிதியை அன்புடன் வரவேற்று புதிய உற்பத்தி நிலையத்தின் பதாகையை திறைநீக்கம் செய்து நாடா வெட்டி திறந்து வைக்குமாறு அழைத்தார்.
அதனை தொடர்ந்து மங்களவிளக்கு ஏற்றிய பினனர் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் அன்றைய பிரதம விருந்தினர் புதிய பதப்படுத்தும் ஆலையை உன்னிப்பாக ஆய்வு செய்து படையினரின் நுகர்வுக்காக யோகர்ட் உற்பத்தி மற்றும் வெளியாட்களுக்கு விற்பனை செய்வது பற்றி அறிந்து கொண்டார்.
இறுதியில் அந் நாளின் நினைவாக இலங்கை சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.
படையினரால் நாளொன்றுக்கு தியத்தலாவையில் தங்களுக்குத் தேவையான யோகர்ட்களை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள முடியும் ஏன்பதோடு மேலதீகமானவற்றை வெளிச் சந்தைக்கு விற்பனைசெய்யவும் முடியும். யோகர்ட் தயாரிப்பின் இலாபம் இராணுவ வீரர்களின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
போர் கருவி பணிப்பாளர் நாயகமும் இலங்கை சேவைப் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.ஆர்.டபிள்யூ.டபிள்யூ.எஸ்.ஜே.பி வணிகசேகர யுஎஸ்பீ, சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர், சிரேஷ்ட உறுப்பினர்கள் ,சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் என்போர் இத் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.