Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

28th June 2023 10:35:40 Hours

இப்பலோகம ‘விருகெகுலு’ பிள்ளைகளின் திறன் வெளிப்பாடு

இராணுவ சேவை வனிதயைர் பிரிவினால் நிர்வகிக்கப்படும் இப்பலோகம 'விருகெகுலு' பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் சிறுவர்கள், திங்கட்கிழமை (26) 'பழ விருந்து' என்ற தொனிப்பொருளில் தங்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டியை இப்பலோகம 'விருகெகுலு' விளையாட்டு மைதானத்தில் வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே கலந்துக் கொண்டதுடன் பல இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களும் பிள்ளைகளுடன் இணைந்து கொண்டனர்.

திருமதி ஜானகி லியனகே அவர்கள் நிகழ்வை பார்வையிடுவதற்காக வளாகத்திற்கு வருகை தந்த போது, சிரேஷ்ட இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் பிள்ளைகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

பேண்ட் வாத்திய காட்சி, அணிநடை காட்சி, சைக்கிள் விளையாட்டு, நட்சத்திர விளையாட்டு, பந்து விளையாட்டு, மீன் பிடிக்கும் விளையாட்டு போன்ற பல்வேறு அம்சங்கள் மற்றும் விளையாட்டுகளில் பிள்ளைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் அந்த பிள்ளைகளின் பெற்றோர்களும் சிறப்பு விளையாட்டுகள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

பிரதம அதிதி பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் உரையாடும் போது சிற்றுண்டிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு முன் பிள்ளைகளுக்கு பரிசுகளை வழங்கினார். அவர்களின் வருடாந்த நிகழ்வில் கலந்து கொண்ட திருமதி ஜானகி லியனகே அவர்களுக்கு விசேட பரிசை வழங்கி சிறுவர்களும் தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தினர். பிரதம அதிதி புறப்படுவதற்கு முன், அதிதி பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சீடி ரணசிங்க ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ, இப்பலோகம ‘விரு கெகுலு’ பாலர் பாடசாலையின் நிர்வாக பொறுப்பாளர் திருமதி தீபரேகா ரணசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.