Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

28th June 2023 11:43:17 Hours

அனுராதபுர ‘விருகெகுலு’ சிறார்களின் திறமை வெளிப்பாடு

அனுராதபுரம் ‘விருகெகுலு’ பாலர் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை (26) காலை ‘ஆரோக்கியமான குழந்தைகள் - ஆரோக்கியமான வாழ்வு’ எனும் தொனிப்பொருளில் அனுராதபுரம் ‘விருகெகுலு’ பாலர் பாடசாலை சிறுவர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாக பல இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார். வருகை தந்த பிரதம அதிதியை வெற்றிலை மற்றும் பூங்கொத்துகள் வழங்கி சிறுவர்கள் அன்புடன் வரவேற்றனர்.

இந் நிகழ்வில் அனைத்து பிள்ளைகளும் ஹாக்கி விளையாட்டு, பந்துகள் சேகரித்தல், மோதிர விளையாட்டு, தலையணை விளையாட்டு, முயல் பாச்சல் போன்ற அம்சங்கள் உட்பட பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

விளையாட்டுப் போட்டியின் போது பிள்ளைகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய நிகழ்வு, வேடிக்கை, பயிற்சி மற்றும் பேண்ட் வாத்திய காட்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளால் மேலும் வர்ணமயமானது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு பிரதம விருந்தினர் பரிசில்களை வழங்கினார். அன்றைய பிரதம விருந்தினருக்கு சிறப்பு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சீடி ரணசிங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் இப்பலோகம ‘விருகெகுலு’ பாலர் பாடசாலையின் நிர்வாக பொறுப்பாளர் திருமதி தீபரேகா ரணசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் பெற்றோர்கள் பங்குபற்றினர்.