29th June 2023 22:09:34 Hours
புதன்கிழமை (ஜூன் 28) நடைப்பெற்ற மெனிங் டவுன் ‘விருகெகுலு’ பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் சிறார்களது வருடாந்த விளையாட்டு போட்டியில் தங்களது விளையாட்டுத் திறன்கள் மற்றும் அழகியல் திறமைகளை வெளிப்படுத்தப்பட்டன.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், பல சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.பிரதம அதிதியை சிறார்கள் பூங்கொத்துகள் வழங்கி வரவேற்றனர்.
அனைத்து சிறார்களும் மகிழ்ச்சியுடன் பல்வேறு அம்சங்கள், விளையாட்டு நடவடிக்கைகள், அதாவது பூ விளையாட்டு, சாக்கு ஓட்டம், அஞ்சல் ஓட்டம், உருளும் விளையாட்டு, ஊட்டும் விளையாட்டு, வீ கோ சிங் சக், கூடைப்பந்து, வினோத உடை, ஹாய் ஹனி பனி போட்டிகள் போன்றவற்றில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வு இலங்கை மின்சார மற்றும் இயந்திரவியல் பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியும், மெனிங் டவுன் ‘விருகெகுலு’ பாலர்பாடசாலையின் பொறுப்பாளருமான திருமதி நந்தனி சமரகோன் மற்றும் பிரதி பொருப்பாளர் திருமதி பிரசாந்தி சந்திரசேன, பெற்றோர் மற்றும் பாலர்பாடசாலையின் ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்திருந்தனர்.
அன்றைய நிகழ்வு மிகவும் சிறப்பாக இருந்தது மற்றும் ஒரு தனி பயிற்சி மற்றும் இசைக்குழு காட்சி நிகழ்ச்சிக்கு வண்ணத்தை சேர்த்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கு பிரதம அதிதி பரிசில்களை வழங்கினார்.
சிரேஷ்ட அதிகாரிகள், சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள், பாலர்பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறார்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.