02nd March 2023 08:16:16 Hours
மென்னிங் டவுனில் உள்ள இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நிர்வகிக்கப்படும் ‘விரு கெகுலு’ பாலர் பாடசாலையில் கற்கும் பிள்ளைகளின் நலனுக்காக இராணுவ சேவை வனிதையர் பிரிவு, லிங்க் நெச்சுரல் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடமாடும் பல் பராமரிப்பு நிலையத்தை செவ்வாய்கிழமை (பெப்ரவரி 28) நடாத்தியது.
‘சுதந்த சமக விரு கெகுலு முவஹசரேலி’ என பெயரிடப்பட்ட இத்திட்டத்தின் நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, லிங்க் நெச்சுரல் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
நடமாடும் பல் பராமரிப்பு நிலையத்தின் போது வாய் ஆரோக்கியம், பல் பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்காக 150 பிள்ளைகள் பரிசோதிக்கப்பட்டனர்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் அழைப்பாளர்கள் வரவேற்கப்பட்ட பின்னர் பாரம்பரிய மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது.
பல் மருத்துவ நிபுணர் வைத்தியர் சகுந்தலா குணவதன, பல் மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் பரிசோதனையை தொடங்கும் முன் ‘வாய் ஆரோக்கியம்’ என்ற தலைப்பில் விரிவுரை ஆற்றினார். இந்த பாலர் பாடசாலையின் பிள்ளைகளின் பெற்றோருக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன. அதன்பின், லிங்க் நெச்சுரல் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள், மென்னிங் டவுன் ‘விரு கெகுலு’ பாலர் பாடசாலையின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பொருட்கள், எழுது கருவிகள் மற்றும் அடங்கிய பொதிகளை விநியோகித்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில், லிங்க் நெச்சுரல் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு திருமதி ஜானகி லியனகே அவர்கள் நினைவுச் சின்னங்களை வழங்கினார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் நளிந்திர மகாவிதாரண, லிங்க் நெச்சுரல் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் திரு. நிஷாந்த பரணகம, இலங்கை சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வாசனா வணிகசேகர, இலங்கை பொறியியல் சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி பிரஷான்தி சந்திரசேன, தியத்தலாவ 'விரு கெகுலு' பாலர் பாடசாலையின் பிரதம மேற்பார்வை அதிகாரி திருமதி உதேனி ஜயரத்ன, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் கலந்து கொண்டனர்.