01st July 2023 22:17:37 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நிர்வகிக்கப்படும் மின்னேரியாவில் உள்ள 'விருகெகுலு' பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் சிறுவர்கள் வெள்ளிக்கிழமை (30) மின்னேரியாவில் உள்ள இலங்கை பீரங்கி படையணி வளாகத்தில் உள்ள ஜெனரல் லயனல் பலகல்ல மைதானத்தில் 'ஜங்கிள்' எனும் தொனிப்பொருளில் தமது வருடாந்த விளையாட்டுப் போட்டியை முழு நாள் பொழுதுபோக்குடன் நடாத்தினர்.
அன்றைய நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பல இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன கலந்து கொண்டார். அவரை சிரேஷ்ட இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் இணைந்து பிள்ளைகள் அன்புடன் வரவேற்றனர்.
பேண்ட் காண்காட்சி, அணிநடை கண்காட்சி,வலிமையான யானை, பட்டாம்பூச்சி விளையாட்டு, தேன் சேகரிப்போம், தரை நடனம் போன்ற பல்வேறு அம்சங்கள் மற்றும் விளையாட்டுகளில் பிள்ளைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியதுடன் மற்றும் அந்தக் பிள்ளைகளின் ஆசியர்களுடன் பெற்றோர்களும் சிறப்பு விளையாட்டுகள் மற்றும் வேடிக்கை செய்யும் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இறுதியில், பிரதம விருந்தினர் பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் தேநீர் விருந்துபசாரத்தின் போது உரையாடினர். அதற்கு முன்னதாக பிரதம அதீதி பிள்ளைகளுக்கு பரிசீல்களை வழங்கினார். அவர்களின் வருடாந்த நிகழ்வில் கலந்து கொண்ட திருமதி ஜானகி லியனகே அவர்களுக்கு விசேட பரிசை வழங்கி சிறுவர்களும் தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தினர்.
மேலும், நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சிவில் ஊழியர்களுக்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி உலர் உணவுப் பொதிகளையும் வழங்கினார். அவர் புறப்படுவதற்கு முன்னர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில குறிப்புக்களையும் பதிவிட்டார்.
இந்நிகழ்வின் போது கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ, கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதி எம் டப்ளியூ டி சீ மெத்தானந்த யுஎஸ்பீ என்டிசீ, மின்னேரியாவில் உள்ள இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ‘விருகெகுலு’ பாலர் பாடசாலை நிர்வாகத்திற்கு பொறுப்பான தலைவி திருமதி ருவீனா மெத்தானந்தா, சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.