Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

புலமைப்பரிசில் திட்டம்:


இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இன்னுமொரு முக்கிய நலன்புரி நடவடிக்கையாக 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இப்புதிய திட்டத்தின் கீழ், மரணமடைந்த/ ஊனமுற்ற போர்வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற/ சேவையாற்றும் இராணுவப் பணியாளர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இன்றுவரை நூற்றுக்கணக்கான புலமைப்பரிசில்கள் தகுதியுள்ள பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அந்த புலமைப்பரிசில்கள் பொதுவாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்றவர்கள், க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சை மற்றும் க.பொ.த (உயர்தரம்) பரீட்சைகளில் சித்தியெய்தியவர்களுக்கு 1 வருடத்திலிருந்து 5 வருடங்கள் வரையிலான காலப்பகுதிகளுக்கு வழங்கப்படுகின்றன.