இத் திட்டத்தின் முதன்மைக் காரணம் இராணுவ வீரர்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுகளை வழங்குவதாகும். இந்த நலன்புரி உணவு திட்டம் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் பராமரிக்கப்பட்டு மேற்பார்வையிடப்படுகிறது. அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நாள் முழுவதும் சத்தான மற்றும் திருப்தியான உணவு கிடைப்பதை உறுதிசெய்து, அவர்களின் உடல் நலனை திறம்பட செய்து கடமைகளை செய்ய உதவுகின்றது. இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் பின்வரும் நலன்புரி உணவுத் திட்டங்கள் பராமரிக்கப்பட்டுவருகின்றன.
- வெரஹெர - கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை
- நாரஹேன்பிட்டி - இராணுவ வைத்தியசாலை
- மெனிங் டவுன் - திருமணமானவர்களுக்கான குடியிருப்பு
- கின்னதெனிய - சிப்பாய்களுக்கான விடுதி
- அக்குரேகொட - இராணுவத் தலைமையகம்
- அக்குரேகொட - பாதுகாப்பு அமைச்சு
- அக்குரேகொட - சிற்றுண்டிச்சாலை
சேவை வனிதையர் பிரிவின் அப்போதைய தலைவியின் ஆலோசனையின் பேரில், படையணிகள், படையலகுகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கு உணவு மற்றும் பானங்களை வழங்குவதற்காக 03 ஜனவரி மாதம் 2013 அன்று மெனிங் டவுன் திருமண மண்டபத்தில் அதிநவீன சேவை வனிதையர் பேக்கரி பிரிவு நிறுவப்பட்டது. மலிவு விலையில் பொதுமக்கள் மற்றும் 'மக்கள் உணவகம்' 10 டிசம்பர் 2020 அன்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்பட்டது.