கொழும்பின் புறநகர்ப் பகுதிகளின் அதிகாரிகள்/ சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்பங்களுக்கு மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பொருட்களை வழங்குவதற்காக அனைத்து அத்தியாவசிய பொருட்களுடன் கூடிய நலன்புரி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் நலன்புரி கடைகளுக்கு மேலதிகமாக சேவை வனிதையர் பிரிவின் பாதீட்டு மையம்’ செயல்படுகிறது. அந்த கடைகளில் ஒரு மினி சூப்பர் மார்க்கெட், பேக்கரி, ஜூஸ் பார், பெண்கள் அலகு கலை நிலையம், சலூன், தையல் கடை, சிற்றுண்டிச்சாலை மற்றும் உடனடி உணவு கடை ஆகியவற்றை கொண்டுள்ளன. அத்துடன் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட மாடிக் கட்டிடம் மினி விருந்து மண்டபத்துடன் கட்டப்பட்டுள்ளது, அங்கு சமூகக் கூட்டங்கள், விழாக்கள் போன்றவை நியாயமான கட்டணத்தில் நடாத்த முடியும். இந்த திட்டத்தின் கீழான நலன்புரி கடைகள் மற்றும் பட்ஜெட் நிலையங்கள் பின்வருமாறு
- நலன்புரி கடை - சிப்பாய்களின் விடுதி - கின்னதெனிய
- நலன்புரி கடை - அதிகாரிகள் உத்தியோகபூர்வ விடுதி -கந்தலந்த
- நலன்புரி கடை – ஜாவத்தை
- நலன்புரி கடை - சூரியகாந்தி கிராமம் - முல்லேரியா
- சேவை வனிதையர் பாதீட்டு நிலையம் - மெனிங் டவுன் விடுதி வளாகம்