Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

‘பிரேவ் ஹார்ட்ஸ்’ திட்டம்


'பிரேவ் ஹார்ட்ஸ்' திட்டம் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் ஆயுதப்படைகளின் சேனாதிபதியுமான அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் ஆயுதப்படைகளின் தளபதியுமான மேதகு கோட்டாபய ஆகியோரால் போரில் காயமடைந்த வீரமிக்க போர்வீரர்களுக்கு சிகிச்சைமுறை மீட்பு மற்றும் மறுவாழ்வு தேவைப்படுவதால், அவர்களின் விலைமதிப்பற்ற வாழ்வின் எஞ்சிய காலத்தில் அவர்களைப் பார்த்துக்கொள்வதை பிரதான நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த உன்னதமான திட்டமானது 2009 செப்டெம்பர் 17ஆம் திகதி அனுராதபுரம் ‘நுவரவெவ’ கரையை அண்டிய 5 ஏக்கர் நிலப்பரப்பில் அடிக்கல் நாட்டப்பட்டதன் ஊடாக ஆரம்பம் பெற்றது.

போரினால் இன்றுக்காக தனது நாளையை தியாகம் செய்த வீரர்களுக்கான அதிநவீன ஆரோக்கிய ஓய்வு விடுதி அபிமன்சல - 1 என்ற பெயரில் நன்றியுணர்வின் அடையாளமாக 2011 ஜூலை 26 அன்று திறந்து வைக்கப்பட்டது.

அனுராதபுரம் அபிமன்சல - 1 ஆரோக்கிய ஓய்வு விடுதி ஆனது 52 மாற்றுத்திறனாளி வீரர்களின் குணப்படுத்தும் நிலையம் மற்றுமின்றி வாழ்நாள் இறுதி வரை தொடர்ச்சியான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தேவைப்படுவதாலும் அவர்களது சொந்த வீட்டில் இவ்வாறான அதிநவீன வசதிகளை வழங்க முடியாமையாலும் இது அவர்களது இரண்டாம் வீடும் ஆகும்.

மேலும் ஆபத்தான காயங்களுடனான 48 பேருக்கான ஆயுட்காலம் சிகிச்சை விடுதியை நிர்மாணிப்பதில் இராணுவ சேவை வனிதையர் பிரிவு முன்னணியில் இருந்ததுடன், 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி மாத்தறை, கம்புருப்பிட்டியவில் அபிமன்சல - II என திறந்துவைக்கப்பட்டது.

யுத்தத்தின் உச்சக்கட்டத்தின் போது காயங்களுக்கு உள்ளான இராணுவத்தின் மேலும் 52 துணிச்சலான இராணுவ வீரர்களுக்கு வசதியளிக்கும் பொருட்டு பிரேவ் ஹார்ட்ஸ்' திட்டத்தின் அதே வசதிகளை கொண்ட மூன்றாவது விடுதி 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இப்பகமுவ, பங்கொல்லவில் அபிமன்சல - III எனும் ஆரோக்கிய விடுதி திறந்து வைக்கப்பட்டது.

மேலும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திலிருந்து இருந்து நாட்டைப் பாதுகாத்தவர்களுக்கும் பிரேவ் ஹார்ட்ஸ் திட்டத்தின் ஊடாக அந்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.