இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பணியானது தேசத்தின் சார்பாக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த போர்வீரர்களின் அடுத்த உறவினர்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்குவதுடன் காணாமல் போன போர்வீரர்களின் அடுத்த உறவினர்களுக்கும் நலன்புரி வசதிகளை வழங்குவதாகும். இதேபோல், தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் போது காயமடைந்தவர்களும் தங்கள் வாழ்நாள் இறுதி வரை கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள்.