இலங்கை சேவை வனிதையர் பிரிவானது அப்போதைய இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக ஸ்தாபிக்கப்பட்டது. அதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதன் பின்னர், அன்றைய முதல் பெண்மணி எலினா ஜெயவர்தனவின் தலைமையில் ஒவ்வொரு நிறுவனங்களினதும் சேவையாற்றுபவர்களின் மனைவிமார்களை உறுப்பினர்களாக கொண்டு உருவாக்கப்பட்டது.
சேவை வனிதையர் அமைப்புக்களின் ஆரம்பத்துடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவு 12 ஜூலை 1984 இல் இலங்கை இராணுவத்தின் அப்போதைய தளபதி மேஜர் ஜெனரல் டி ஐ வீரதுங்க வீஎஸ்வீ ஆர்சிடிஎஸ் என்டிசி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் உருவாக்கப்பட்டது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் முதலாவது தலைவியாக திருமதி சோனியா வீரதுங்க பணியாற்றினார். அவரது பணிக்காலம் 12 ஜூலை 1984 இல் தொடங்கி 11 பெப்ரவரி 1985 இல் முடிவடைந்தது.
இக்கிளையானது யுத்தத்தின் போது மரணமடைந்த/ ஊனமுற்ற வீரர்களின் உறவினர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் காணிகளை வழங்குதல், வீடுகளை நிர்மாணித்தல், குறை நிர்மாண வீடுகளை நிறைவு செய்தல், தளபாடங்கள் மற்றும் பிற தேவையான பொருட்களை வழங்குதல் போன்ற நோக்கங்களுடன் ஸ்தாபிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் மாற்றுத்திறனாளி வீரர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் பொருட்களை வாங்கும் வகையில் நலன்புரி நிலையங்களை நிறுவுதல், இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளை பாராமரிப்பதற்கான பராமரிப்பு நிலையங்கள் மற்றும் பாலர் பாடசாலைகளை நடத்தல். மருத்துவ உதவி வழங்குதல். இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு, தேசிய மற்றும் மத ரீதியாக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ஆதரவளித்தல், போரின் போது கொல்லப்பட்ட/ காணாமல் போன மற்றும் காயமடைந்த போர்வீரர்களின் உறவினர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை வகுத்தல், இராணுவ குடும்பங்களின் உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்களை தொடங்குதல், தொழில்நுட்பம் மற்றும் பிற வர்த்தகங்கள் மற்றும் அழகு கலாசார வசதிகளை வழங்குவதில் அவர்களின் அறிவை விரிவுபடுத்துதல் என்பன அமைப்பின் பிரதான வகிபாங்கு ஆகும்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவு ஆனது அன்றைய இராணுவத் தலைமையகத்தில் சேவையாற்றிய சிரேஷ்ட அதிகாரிகளின் மனைவிமார்களை உறுப்பினர்களாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் முதலாவது தலைவியாக அப்போதைய இராணுவத் தளபதியின் துணைவியார் பதவியேற்றதுடன் அவரது வழிகாட்டலில் போர்வீரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நலன்புரி சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மேற்கூறிய நோக்கங்களை அடையும் பொருட்டு சேவையிலுள்ள வீரர்களின் மன உறுதியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல், திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், படையினரின் பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான புலமைப்பரிசில்களை வழங்குதல் மற்றும் தேசிய பேரனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் இராணுவ வீரர்களுக்கு உதவிகளை வழங்குதல் போன்றவைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
1998 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியாக கடமைகளை பொறுப்பேற்ற திருமதி தில்ஹானி வீரசூரியவின் காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தின் படையணி தலைமையகங்களின் சேவை வனிதையர் பிரிவு மகளிர் கழகங்கள் என்ற பெயரில் நிறுவப்பட்டு இராணுவ சேவை வனிதையருடன் இணைக்கப்பட்டது. படையணிகளின் படைத் தளபதிகளின் மனைவிமார் படையணி மகளிர் கழகங்களின் தலைவிகளாக நியமனம்பெற்றனர். 2006 ஆம் ஆண்டு ஒவ்வொரு படையணி மகளிர் கழகங்களும் அந்தந்த படையணிகளின் சேவை வனிதையர் பிரிவு என மறுபெயரிடப்பட்டன.