Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

24th July 2024 17:10:18 Hours

மெனிங் டவுன் ‘விருகெகுலு’ பிள்ளைகளின் விளையாட்டு திறன்கள்

வருடந்தோறும் நடைப்பெறும் மெனிங் டவுன் ‘விருகெகுலு’ பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளின் விளையாட்டு போட்டி 23 ஜூலை 2024 அன்று மெனிங் டவுன் ‘விருகெகுலு’ பாலர் பாடசாலையில் நடைப்பெற்றது அதில் சிறார்கள் தங்கள் விளையாட்டுத் திறன்களையும் அழகியல் திறமைகளையும் வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார். விருந்தினரை, பிள்ளைகள் தாம்பூலம் வழங்கி வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் அனைத்து பிள்ளைகளும் பல்வேறு அம்சங்கள், விளையாட்டு நடவடிக்கைகள், இசைக்குழு காட்சி, ஒப் லிட்டில் பன்னி, பழங்கள் பொருத்துதல், ஆமை விளையாட்டு, தவளை விளையாட்டு, குரங்கு விளையாட்டு, சபாரி விளையாட்டு, பந்துகளுடன் வேடிக்கை, யானை விளையாட்டு மற்றும் தேனீ விளையாட்டு போன்றவற்றில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிள்ளைகளுக்கு பிரதம விருந்தினர் பரிசில்களை வழங்கினார்.

நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகமும் இராணுவ பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி, இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. ஷம்மி ஜயவர்தன, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் சிறார்களின் பெற்றோர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.